Breaking

यह ब्लॉग खोजें

Wednesday, 14 September 2022

ஆயுளின் கேடயம் ஆயுர்வேதம்! பாகம் 1 (பித்த நிவர்த்தி மருந்துகள்)

 தலை (சிரசு)


"மதி வேண்டும் நின் கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில் நான் வாழ வழி வேண்டும்" என்ற வள்ளலார் பாடலுக்கு ஏற்ப நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்குமிணங்க நல்வாழ்வு மலர உடல் நோயுற்றால் செல்வத்தை செலவு செய்ய நேரும். எனவே நாம் நோயின்றி வாழ வழி செய்வதே இந்நூலின் கோட்பாடாகும். எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதற்கு இணங்க

தலையும், அதனைச் சார்ந்த ஐம்பொறிகளைப் பற்றியும் பார்ப்போம். “பித்தம் தலைக்கு ஏறிடுச்சா" என்று சமயத்துல கிண்டல் பேச்சு, எட்டிப் பார்க்கும் சித்தம் இருந்தா.... வேலையே ஓடாது. ஏடா கூடமா எதையாச்சும் செய்வோம். இது மாதிரியான சமயத்தில் அவசியம் மருந்து தேவைப்படும். சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பது தேவவாக்கு போன்ற தேவையான வாக்கு

பித்த நிவர்த்தி மருந்துகள்


1. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும்.

2. 100 கிராம் திராட்சை உலர்ந்ததை, 200 கிராம் கடுக்காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3கிராம் அளவு சாப்பிட்டு வர பித்தம், வாந்தி, வாய்கசப்பு தீரும்.

3. சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்ச வேர், கிராம்பு ஆகியவை களை வகைக்கு 10கிராம் வீதம் எடுத்து தூள் செய்து அந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும்.

4. திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூளை விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.

No comments:

Post a Comment